Regional01

காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை : திருச்சி, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

காய்கறி, பழங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

தளர்வுகளற்ற ஊரடங்கின் போது, திருச்சி மாவட்டத்தில் (குடிநீர், பால், மருந்தகம், பத்திரிகை விநியோகம் தவிர) காய்கறி, மளிகை உட்பட எவ்வித கடைகளுக்கும் அனுமதியில்லை. காய்கறி, பழங்கள் மொத்த வியாபாரம் மேலரண் சாலை மற்றும் பாலக்கரை பஜார் பகுதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைபெறும். இங்கு சில்லறை வியாபாரத்துக்கு அனுமதி இல்லை. எந்தக் கடையிலாவது சில்லறை விற்பனை செய்யப்பட்டால், மொத்த விற்பனை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

காய்கறி, பழங்கள் ஆகியவை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வாகனங்களில் பொதுமக்களின் இருப்பிடத்துக்கே சென்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை விற்பனை செய்யப்படவுள்ளது. வாகனத்தின் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள் இதற்கான அனுமதிச் சீட்டை மாநகராட்சி உதவி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். அனுமதிச் சீட்டு இல்லாமல் விற்பனையில் ஈடுபட்டால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி, பழங்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய் தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தொடர்புடைய தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம் ஆகியவற்றின் துணை இயக்குநர்களால் வாகனங் களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களில் ஓட்டுநருடன் கூடுதலாக ஒருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.

மளிகைப் பொருட்களை கடைகளில் நேரடி விற்பனை செய்ய அனுமதி இல்லை. அதே வேளையில், வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் மளிகைப் பொருட்களை கேட்டால், கடை பணியாளர் மூலம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யலாம்.

சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடை பிடித்து உணவுப் பொட்டலங்கள் வழங்கவும், பிராணிகளுக்கு உணவு வழங்கவும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடை பெறும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மேற் கொள்ளப்படும் அனைத்து நட வடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண் டும் என தெரிவித்துள்ளார்.

புகார் தெரிவிக்க...

SCROLL FOR NEXT