மத்திய மண்டலத்தில் அதிகபட் சமாக திருச்சியில் நேற்று புதிதாக 1,407 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அரியலூரில் 293, கரூரில் 275, நாகப்பட்டினத்தில் 461, பெரம் பலூரில் 475, புதுக்கோட்டையில் 415, தஞ்சாவூரில் 1,176, திருவா ரூரில் 572, திருச்சியில் 1,407 பேர் என 5,074 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூர் 6, கரூர் 8, நாகப்பட்டினம் 3, பெரம்பலூர் 2, புதுக்கோட்டை 2, தஞ்சாவூர் 20, திருவாரூர் 5, திருச்சி 13 பேர் என 59 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 198 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டது. 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.