Regional02

அத்தியாவசிய தேவைக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உதவும் வகையில் 9 ஊராட்சி ஓன்றியங்களிலும் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கு தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வலி மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களில் 1,337 குக்கிராமங்களிலும் மகளிர் குழுக்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க ஊராட்சி அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குக்கிராமங்கள் அளவில் கரோனா கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு நோய் பரவல் குறைக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண்கள் விவரம் வருமாறு:

பாளை. 0462-2572092, மானூர் 0462-2485123, அம்பாசமுத்திரம் 04634-250397, சேரன்மகாதேவி 04634-260131, பாப்பாக்குடி 04634-274540, நாங்குனேரி 04635-250229, களக்காடு 04635-265532, வள்ளியூர் 04637-220242,ராதாபுரம் 04637-254125

SCROLL FOR NEXT