மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இம்மையத்தை நேற்று எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி சவுந்தரம், ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணியம், மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.