Regional02

அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால் - ஆம்புலன்ஸில் காத்திருந்த கரோனா நோயாளி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கரோனா தீவிர பரவல் காரணமாக தொற் றாளர்கள் அதிகம்பேர் சிகிச்சைக்கு வருவதால் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்த 34 வயதான இளைஞருக்கு தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஆம்புலன்ஸில் நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், அங்கு படுக்கை வசதி கிடைக்காத நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த அவர் வாகனத்தில் இருந்த ஆக்சிஜனும் தீர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வாறான உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT