விழுப்புரம் காந்தி சிலை அருகே நகருக்குள் வந்தவர்களிடம் போலீஸார் விசாரித்து அனுப்பி வைக்கின்றனர். 
Regional01

விழுப்புரம் மாவட்டத்தில் 1,024 பேருக்கு அபராதம் :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவழிகாட்டு முறைகளை கடைபிடிக்காத 1,024 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும்வகையில் விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் 13 சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறை, சுகாதாரம், வருவாய்த் துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியில் இருந்து விழுப்புரம் நகருக்குள் வருபவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய பிறகே நகருக்குள் செல்ல அனுமதி வழங்குகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வழிகாட்டுமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி கடந்த 20 மற்றும் 21-ம் தேதி ஆகிய 2 நாட்களில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த 324 பேருக்கு தலா ரூ. 100 வீதமும், சமூக விலகலை கடைபிடிக்காத இருவருக்கு தலா ரூ. 500அபராதம் விதிக்கப்பட்டது. தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் பயணித்த 646 பேருக்கும், 3 சக்கரவாகனங்களில் பயணித்த 20 பேருக்கும், 4 சக்கரவாகனங்களில் பயணித்த 11 பேருக்கும் என 698 பேருக்கு குறைந்தபட்சம் ரூ. 100 அதிகபட்சம் ரூ. 1500அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காத 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2 நாட்களில் 1,024 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT