Regional02

எம்.பிக்கள் தொகுதி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் : சு.திருநாவுக்கரசர் எம்.பி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க வேண்டும் என்று திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

திருச்சியில் , மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, துவாக்குடி அரசு மருத்துவமனை, ரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் பெல் நிறுவனம் ஆகிய இடங்களில் எம்.பி சு.திருநாவுக்கரசர் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு எனது சொந்த செலவில் 30 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கி வருகிறேன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக, நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளால், கரோனா தடுப்புப்பணி மட்டுமின்றி மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியவில்லை. எனவே, இந்த நிதியை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT