Regional01

பழைய விலையிலேயே டிஏபி விற்பனை - கார் பருவ சாகுபடிக்கு தேவையான விதை, உரங்கள் கையிருப்பு : தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

``தென்காசி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு தேவையான விதை, உரங்கள் கையிருப்பு உள்ளது. பழைய விலையிலேயே டிஏபி உரம் விற்பனை செய்யப்படுகிறது” என்று, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு கார் பருவ சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள் உட்பட அனைத்து இடுபொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, யூரியா 4.560 டன், டிஏபி 510 டன், பொட்டாஷ் 990 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2.670 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நாட்களிலும் உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதை விற்பனை நடைபெறுகிறது. விற்பனை யாளர்கள் அனுமதிக்கப்பட்ட விலையிலேயே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பன்னாட்டு சந்தையில் மூலப்பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், டிஏபி உரம் மானியத்துடன் பழைய விலையாகிய மூட்டை ஒன்றுக்கு ரூ.1,200 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும் என அனைத்து உர விற்பனை யாளர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT