ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் (30). இவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை தெய்வநாயகம் தெருவில் மளிகைக் கடை வைத்து, மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 19-ம்தேதி இரவு கடை ஊழியர் ஓம்பிரகாஷ் கூட்டாளிகள் இருவருடன் வீட்டில் தனியாக இருந்த மோகன்குமாரை தாக்கி, கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதையடுத்து, கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஓம்பிரகாஷ் மற்றும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.