Regional02

18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த - திருப்பூர் மாவட்டத்துக்கு 39,000 டோஸ் தடுப்பூசி வந்தது :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த 39,000 டோஸ் தடுப்பூசிவந்துள்ளது.

தமிழகத்தில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி வாகன ஓட்டுநர்கள், அரசுமற்றும் தனியார் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்பவர்கள் என பலரும் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாவட்டத்துக்கு 39,000 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறைஅதிகாரிகள் கூறும்போது, "18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த, முதல்கட்டமாக மாவட்டத்துக்கு கோவேக்சின் 5,900 டோஸ், கோவிஷீல்டு 33,700டோஸ் என 39,600 டோஸ் வந்துள்ளது. அரசு வழிகாட்டுதல் வந்தவுடன் தடுப்பூசி செலுத்தப்படும். இதனால், யாரும் அச்சமடைய தேவையில்லை. அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT