கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் செய்யும் விவசாயிகள் உழவர் சந்தையை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தற்போது கரோனா நோய் தொற்று தாக்கத்தினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தையினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் விளைவித்த விளை பொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம்.