Regional02

மத்தூரில் 30 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் தொடக்கம் :

செய்திப்பிரிவு

மத்தூரில் 30 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்தூர் அரசு மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் செய்யப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.

நேற்று செயல்படத் தொடங்கிய சில மணி நேரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தமாக 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 15-ம் தேதியிலிருந்து பாதிப்பு குறையும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT