Regional01

3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை: : திருச்சி எம்.பி வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனை, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, பெல் நிறுவனம் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளேன். இதுதொடர்பாக முதல்வரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும்.

கரோனாவை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இந்த பாதிப்புக்கான ஊசியை தமிழகத்துக்கு அதிகளவில் வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் அனுப்பியுள் ளேன். கரோனா பரவல் தடுப்புப் பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் உதவிகளை மத்திய அரசும், மத்திய சுகாதார அமைச்சகமும் உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT