Regional02

மத்திய மண்டலத்தில் 4,723 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் 4,723 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் 283, கரூரில் 344, நாகப்பட்டினத்தில் 585, பெரம்பலூரில் 202, புதுக்கோட்டையில் 423, தஞ்சாவூரில் 824, திருவாரூரில் 731, திருச்சியில் 1,331 பேர் என மத்திய மண்டலத்தில் 4,723 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கரூரில் 8, நாகப்பட்டினத்தில் 16, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூரில் தலா 1, தஞ்சாவூரில் 10, திருச்சியில் 15 என மொத்தம் 52 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 830 பரிசோதனை முடிவுகளில் 249 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT