பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, ஊரடங்கு விதிமுறைகளை மீறி நேற்று வெளியில் சுற்றிக்கொண்டிருந்த 71 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 71 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முகக்கவசம் அணியாமல் வந்த 74 பேர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 9 பேர் என மொத்தம் 83 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.