Regional02

சடலத்தை சாலையில் வைத்து மறியல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே வீரமங்கலம் ஊராட்சி காமராஜர் நகரைச் சேர்ந்த ஒரு முதியவர் நேற்று காலமானார்.

இவரது சடலத்தை மயானத்துக்கு கொண்டுசென்றபோது, ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி, மாற்றுப் பாதையில் கொண்டுசெல்ல வலியுறுத்தினர்.

இதற்கு, சடலத்தை கொண்டு சென்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சடலத்தை சாலையில் இறக்கிவைத்து, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் மார்ட்டின் லூதர்கிங், டிஎஸ்பி ஜெயசீலன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர்.

SCROLL FOR NEXT