வேலூர், தி.மலை மாவட்டங்களில் புதிதாக 1,247 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தொற்று பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா பாதிப்பு 37,216-ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 32,954 பேராகவும் இருந்தனர். இதுவரை 575 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் புதிதாக 521 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 700 என்றளவில் இருந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,090 பேருக்கு தொற்று பாதிப்பு உச்சபட்சமாக இருந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை குறைந்தது.
தி.மலையில் 726 பேருக்கு தொற்று