Regional01

ஊரடங்கு காலத்தில் சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையில் ஆலோசனை :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஊரடங்கு காரணமாக வெளியே செல்வதை தவிர்த்து தங்கள் பகுதியின் தோட்டக்கலை உதவி இயக்குநர்களிடம் ஆலோசனையும் உதவியும் பெறலாம். கோலியனூர் - 9943072887, காணை - 9940801374, விக்கிரவாண்டி - 9500761196, மயிலம் - 9791070478, முகையூர் - 9791590586, கண்டமங்கலம் - 8883564586, வானூர் - 9976196911, மரக்காணம் - 9943072887, திருவெண்ணெய்நல்லூர் - 9786723118, செஞ்சி - 9791171116, மேல்மலையனூர் - 8760969905, ஒலக்கூர் - 9994716499, வல்லம் - 9994716499 என்ற எண்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அன்று அறுவடை செய்வதை தவிர்த்து சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரலாம் என விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT