Regional01

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், கட்டுநர் உள்ளிட்ட இதர மருத்துவப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

தலைமை செவிலியர் ஒருவரே அனைத்தையும் எடுத்துச் சென்று விடுவதாகவும், அதனால் பணியாளர்கள் தங்களது சொந்த செலவில் தடுப்பு உபகரணங்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சுகாதாரத் துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மருத்துவப் பணியாளர்கள் நேற்று மருத்துவமனை வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

SCROLL FOR NEXT