Regional02

திண்டிவனம் அருகே இடி தாக்கி சிறுவன் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அப்போது திண்டிவனம் அருகே சாலை கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகன் அரவிந்த் (12, ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்) தனது தந்தை பிரபுவுடன் நிலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள தென்னை மரத்தின் கீழ் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.

அப்போது இடி தாக்கியதில் அரவிந்த் மயங்கி விழுந்தார். அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT