Regional02

மின்னல் தாக்கி 3 பேர் மரணம் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல்(50) ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் பார்த்திபனூர் அருகே வடுகநாதபுரம் கிராமத்தில் நேற்று ஆடு மேய்க்கும்போது கன மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பழனிவேல் உயிரிழந்தார். பார்த்திபனூர் போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேட்டு சோழாந்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி குஞ்சரம்(48). இவர் நேற்று வயலுக்குச் சென்று கொண்டி ருந்தபோது மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி குஞ்சரம் உயிரிழந்தார்.

மருதூரைச் சேர்ந்த முருகன்(43) நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் இவர் இறந்தார்.

திருப்பாலைக்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT