Regional01

கரோனா விதிமுறை மீறி திறந்திருந்த ஜவுளிக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் :

செய்திப்பிரிவு

நாமக்கல்லில் கரோனா விதிமுறையை மீறி ஜவுளிக் கடையை திறந்து விற்பனை செய்த உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுவோரை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி நாமக்கல் அருகே எருமப்பட்டி கடை வீதியில் தடையை மீறி ஜவுளிக்கடையை திறந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தகவல் அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது எருமப்பட்டி - முட்டாஞ்செட்டி சாலையில் ஜவுளிக் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடையின் உரிமையாளருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், தொடர்ந்து கடை நடத்தினால் ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT