Regional02

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிவு :

செய்திப்பிரிவு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று 2000 கனஅடியாக சரிந்தது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 3000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி 2000 கனஅடியாக சரிந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, நீர்வரத்து குறைந்தும், அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 132 கனஅடியாக இருந்தது. நேற்று காலை 73 கனஅடியாக சரிந்தது. அணையில் 7.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. நேற்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கிருஷ்ணகிரி நகரில் மாலை வானம் மேகமூட்டத்துடன், குளிர்ந்த சீதோஷ்ணநிலை காணப் பட்டது.

SCROLL FOR NEXT