தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே வருவதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளன.
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன், தொற்று நோய் பரவல் மற்றும் பொது சுகாதார விதிகளின் கீழ் காவல் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை 6383755245 என்ற செல்போன் எண்ணிலும், 0461-4227202 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்து உதவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.