Regional02

சேலம் சித்த மருத்துவ கரோனா மையத்தில் - கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை :

செய்திப்பிரிவு

சேலத்தில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ கரோனா தற்காலிக சிகிச்சை மையத்தில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சேலம் அரசு மோகன் குமாரம ங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆத்தூர், ஓமலூர், பெத்தநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லேசான தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சேலம் மணியனூர் சட்டக் கல்லூரி, மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட மேலும் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், லேசான தொற்று கண்டறியப்படுபவர்கள் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ கரோனா தற்காலிக சிகிச்சை மையத்தில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு சிகிச்சை பெற்ற நூற்றுக்கணக்கானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் சித்தா சிகிச்சைப் பிரிவுக்கு கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இங்கு 200 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.கடந்த ஆண்டு தொற்றுப் பரவலின்போது, உத்தமசோழபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த சித்த மருத்துவ கரோனா தற்காலிக சிகிச்சை மையத்தில் 60 படுக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந் தது.

SCROLL FOR NEXT