Regional01

உறையூர் மீன் மார்க்கெட் மே 30 வரை மூடல் :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட மீன் மொத்த வியாபார நலச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், வியாபாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி மே 20(இன்று) முதல் மே 30-ம் தேதி வரை உறையூர் காசி விளங்கி மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செயல்படாது. மார்க்கெட்டில் உள்ள அனைத்துக் கதவுகளும் அடைக்கப்படும்.

மேலும், மொத்த வியாபாரிகள் வேறு எந்த இடத்திலும் மீன் விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறி வேறு இடங்களில் மொத்த வியாபாரம் செய்தால் சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT