Regional02

மன்னார்குடி உழவர் சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றம் :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக உழவர் சந்தைக்கு வந்துசெல்லும் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில், உழவர் சந்தை நேற்று முதல் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி யைப் பின்பற்றி, பொருட்களை வாங்கிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT