திருநெல்வேலியில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் மூலிகைப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
திருநெல்வேலியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சேவா பாரதி, பாரதி சேவா கேந்திரம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, பாளையங்கோட்டை, சமாதானபுரம், முனிசிபல் காலனி, காமராஜ் காலனி, உடன்குடி தெரு, டாக்டர் அம்பேத்கர் நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் மூலிகை பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், சேவா பாரதி மாவட்ட தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இவற்றை வழங்கினர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இதுபோல் கபசுரக்குடிநீர் மூலிகை பொட்டலங்கள் வழங்கப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சேவா பாரதி, பாரதி சேவா கேந்திரம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வழங்கின.