பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் பெய்த மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டி. படம்: மு. லெட்சுமி அருண் 
Regional01

தூத்துக்குடி, நெல்லையில் காற்றுடன் மழை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்தடை ஏற்பட்டது.

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை 3 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் மில்லர்புரம் சந்திப்பு அருகே மரம் சாய்ந்தது. இதேபோல பிரையண்ட் நகர் 12-வது தெரு பகுதியிலும் மரம் விழுந்தது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியது.

திருநெல்வேலி

திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், சாந்திநகர், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி அரைமணி நேரத்துக்கு மழை பெய்தது. இதனால் சாலையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

இந்த மழையால் காலையிலி ருந்து நீடித்த வெப்பம் ஓரளவுக்கு தணிந்தது. எனினும், புதிய பேருந்து நிலையம், மேலப்பாளையம், பேட்டை, டவுன் பகுதிகளில் மழை இல்லை.

மாவட்டத்திலுள்ள அணை களின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

பாபநாசம்- 107.95 அடி (143), சேர்வலாறு- 120.54 அடி (156), மணிமுத்தாறு- 85.90 அடி (118), வடக்கு பச்சையாறு- 42.49 அடி (50), நம்பியாறு- 12.53 அடி (22.96), கொடுமுடியாறு- 20.50 அடி (52.25).

SCROLL FOR NEXT