‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் கீழ் மனுதாரர்களுக்கு பயன்கள் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராணி என்பவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார். அருகில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ். 
FrontPg

பொதுமக்களின் மனுக்கள் மீது 10 நாட்களில் தீர்வு - ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’திட்டத்தை தொடங்கினார் ஸ்டாலின் : மனுதாரர்களுக்கு பயன்களை வழங்கினார்

செய்திப்பிரிவு

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறை தொடங்கப்பட்ட 10 நாட்களில் மனுதாரர்களுக்கு அதற் கான பயன்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர் தல் பிரச்சாரத்தின்போது, ‘உங் கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வுகாணும் வகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். அவ ரிடம் கடந்த மே 9-ம் தேதி அனைத்து மனுக்களையும் முதல் வர் ஒப்படைத்தார். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 72 மரப்பெட்டிகள் மற்றும் 275 அட்டைப் பெட்டிகளில் 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக் கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை 70 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் பதிவேற்றப்பட்டதுடன் அடையாள எண் வழங்கப்பட்டு, அதுகுறித்த குறுஞ்செய்தி மனு தாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண் மைத் தன்மைக்கேற்ப தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வுக் குப் பிறகு உடனடி தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள் கின்றனர்.

இதுவரை சென்னை, திரு வள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய 6 மாவட் டங்களில் இருந்து பெறப்பட்ட 549 மனுக்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கியதை குறிக்கும் வகையில் 10 பயனாளி களை நேரில் அழைத்து அவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அதில், சென்னை ஆதம்பாக்கம் ராணிக்கு முதியோர் உதவித் தொகை, பரங்கிமலை என்.நித்யா வுக்கு விதவை உதவித் தொகை, தி.நகர் யு.சத்யநாராயணனுக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகை, சூளைமேட்டைச் சேர்ந்த தாயாரம்மாவுக்கு முதிர்கன்னி உதவித்தொகை, தண்டையார்ப் பேட்டையைச் சேர்ந்த சுமதிக்கு தையல் இயந்திரம், வில்லிவாக்கம் உதயகுமாருக்கு வாரிசு சான் றிதழ், ஆயிரம் விளக்கைச் சேர்ந்த நந்தினிக்கு காதுகேட்கும் கருவி, ராணிப்பேட்டை கொண்டபாளை யத்தைச் சேர்ந்த ஜெயந்திக்கு இலவச வீட்டுமனை பட்டா, வெங்குபட்டுவைச் சேர்ந்த முத்துராமனுக்கு வீடு கட்ட உதவி, சிறுவாளைத்து சுபாஷ்க்கு சொட்டுநீர் பாசன திட்டம் ஆகியவை முதல்வரால் வழங்கப்பட்டன.

சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி வந்த பொதுவான கோரிக் கைகள் பரிசீலிக்கப்பட்டு நட வடிக்கை எடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக, நான்கு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் - அழிஞ்சிவாக்கத் தில் ரூ.10.1 லட்சம் மதிப்பில் அங்கன் வாடி கட்டிடம், ஆமூர், சித்தேரி கால்வாயில் ரூ.4.6 லட்சத்தில் தடுப்பணை, ராணிப்பேட்டை, அசநெல்லிக்குப்பத்தில் ரூ.1.89 லட்சத்தில் சிமென்ட் சாலை, கல்மேல் குப்பம் ஊராட்சியில் எருக்கம் தொட்டி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.1.1 லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் திட்டங்களுக்கான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அதேபோல இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

நிகழ்வில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT