கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், நேற்று (மே 18) முதல் நீலகிரி மாவட்டத்துக்குள்ளும் காலை 10 மணிக்குமேல் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச்செல்ல இ-பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று காலைமுதல் மாவட்டம்முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் நாளை (இன்று) திறக்கப்படும். 100ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூடுதலாகஉள்ளன. நீலகிரி மாவட்டத்துக்குள் காலை 10 மணிக்குமேல் தேவையில்லாமல் பொதுமக்கள் சுற்றுவதைத்தடுக்க இ-பதிவு கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு இன்றி சுற்றித்திரிவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். தேயிலை,மலைக்காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச்செல்ல இ-பதிவு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
1,199 பேர் மீது வழக்கு