Regional01

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 339 வாகனங்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

ஊரடங்கையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டகாவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை கள் காரணமாக இதுவரை 139 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா 2-வது அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அரசின் உத்தரவை மீறி உரிய அனுமதிக்கான ஆவணங்களின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 139 வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதோடு, முகக்கவசம் அணியாத 9,264 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 538 பேர் மீதும் என 9,802 வழக்குகள் பதிவு செய்து அபராதத் தொகையாக ரூ.21,19,100 வசூலித்துள்ளனர்.

ஊரடங்கை மீறி கள்ளச்சாராயம் விற்றவர்கள், காய்ச்சுபவர்கள் என 63 வழக்குகள் பதிவு செய்து, 1,345 லிட்டர் கள்ளச்சாராயமும், 190 லிட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 17,080 லிட்டர் சாராய ஊரல்களையும் கைப்பற்றி அழித்துள்ளனர்.

விழுப்புரம்

இவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த இரு நாட்களாக விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் திடீர் நடவடிக்கையில் இறங்கினர்.

சாலையில் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக செல்வோரை மட்டும் அனுமதித்த போலீஸார் மற்றவர்களை திருப்பி அனுப்பினர். வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.இந்நடவடிக்கையால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களிலும் சுமார் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT