ஒட்டன்சத்திரம் அருகே பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்த உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி. 
Regional02

பரப்பலாறு அணையில் இருந்து : பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு :

செய்திப்பிரிவு

நீர் இருப்பை பொருத்து முறைப் பாசனம் முறையில் ஜூன் 6-ம் தேதி வரை 17 நாட்களுக்கு தினமும் 102 மில்லியன் கன அடி நீர் பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. இதன்மூலம், ஒட்டன்சத்திரம் பகுதியில் பெருமாள் குளம், முத்து பூபால சமுத்திரம், சடையகுளம், செங்குளம், ராமுசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு 1222.85 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT