கடலாடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ. மணிகண்டன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக். 
Regional02

கரோனா தொற்று பாதித்த : கடலாடி சிறப்பு எஸ்.ஐ. மரணம் :

செய்திப்பிரிவு

அதையடுத்து சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி போலீஸ் மரியாதையுடன் மணிகண்டன் உடல் சொந்த ஊரான புதூரில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு அன்னலெட்சுமி என்ற மனைவி, பாண்டியராஜன், கணேஷ்குமார் ஆகிய இரு மகன்கள், விஜயலெட்சுமி என்ற மகள் உள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் பணியாற்றிய கடலாடி காவல் நிலையத்தில் அவரது உருவப்படத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முதுகுளத்தூர் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி, கடலாடி இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்.ஐ.கள் கார்த்திகைராஜா, கருப்புசாமி உள்ளிட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் 72 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் சிகிச்சை பெறச் சென்றுள்ளனர்.

SCROLL FOR NEXT