தூத்துக்குடியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு கேபிள்டிவி வட்டாட்சியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தங்கசீலன் (52). இவர்,தூத்துக்குடி மாவட்ட அரசு கேபிள்டிவி வட்டாட்சியராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டாட்சியராக பணியாற்றியுள்ளார்.
இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ராஜ்குமார் தங்கசீலன் படத்துக்கு ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அவரது திருவுருவபடத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.