Regional02

அவிநாசியில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

செய்திப்பிரிவு

அவிநாசி காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அவிநாசி வள்ளுவர் வீதி ஜோயல் சித்தார்த் (22), திருப்பூர் பெரியாயிபாளையம் பகுதியில் வசித்து வந்த நிலக்கோட்டையை சேர்ந்த செல்லத்துரை (35), திண்டுக்கல் செல்வராஜ் (23), திருப்பூர் காங்கயம் சாலை கார்த்திக் (23) ஆகியோர் கடந்த இரு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திஷாமித்தல் உத்தரவுப்படி, 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான ஆணையை, சிறையில் உள்ள 4 பேரிடமும், போலீஸார் வழங்கினர்.

SCROLL FOR NEXT