சிவகங்கை மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட, இறந்தவர்களின் குடும்ப அட்டைகளையும் கரோனா நிவாரணத் தொகை பெறுவதற்கான பட்டியலில் சேர்த் துள்ளதால் ரேஷன் கடைகள் சர்ச்சையில் சிக்கி உள்ளன. இதில் திருப்பத்தூர் பகுதியில் அதிக முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரத்துக்காக, முதற்கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டு தேதி வாரியாக ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் மூலம் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்துக்கு ரூ. 80.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த காலங் களில் ரத்து செய்யப்பட்ட ஒரு நபர் குடும்ப அட்டைகள் மற் றும் இறந்தவர்களின் குடும்ப அட்டைகளும் பயனாளிகள் பட்டி யலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் நிவாரண நிதி வழங்குவதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள் ளதாகப் புகார் எழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதுபோல பயனாளிகள் பட்டியலில் குளறு படி உள்ளதாகக் கூறப்பட்டாலும், திருப்பத்தூர் பகுதியில் அதிக அளவில் முறைகேடு நடந்துள்ள தாகவும் புகார் தெரிவிக்கப் படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் ரேஷன் கடை களில் பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படை யில்தான், பயனாளிகளுக்கு நிவாரணத் தொகை ஒதுக்கப்பட் டுள்ளது’ என்றனர்.