ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம், கிறிஸ்துஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார். 
Regional01

ஈரோட்டில் கரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு : 24 மணி நேரமும் இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு மாநகராட்சி அலுவலகத் தில் ஒருங்கிணைந்த கரோனா கட்டுப்பாட்டு மையத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அமைச்சர் சு.முத்து சாமி கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள், மருந்து, ஆக்சிஜன் தேவைகள் குறித்த விவரங்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதற்காக 8056931110, 8754731110, 8220671110, 8870361110, 8220791110, 8870541110, 8754231110, 8870581110, 8754381110, 8870691110 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

இக்கட்டுப்பாட்டு மையமானது, 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என 24 மணிநேரமும் 3 குழுக்களுடன் செயல்படுகிறது.

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டால், அவர்களுக்கு 2 வேன்களில் ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேனிலும் ஒரே நேரத்தில் 4 நபர்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். இந்த வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணி ஆய்வு மற்றும் மருத்துவ நிர்வாக செலவிற்காக தனியார் பங்களிப்பு தொடர்பாக, தனியார் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் ஆலோ சனை மேற்கொண்டார். அப்போது, இப்பணிகளுக்கு பங்களிப்பு தொகைக்கான கடிதம் மற்றும் காசோலைகளை தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அமைச்சரிடம் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், எஸ்பி பி.தங்கதுரை, சுகாதாரத்துறை இணை இயக்குநர் கோமதி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளிசங்கர், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT