Regional01

விற்பனை நிறுத்தப்பட்டது தெரியாமல் ரெம்டெசிவிர் வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் :

செய்திப்பிரிவு

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தனியார் மருத்துவமனை களிலேயே இன்று தொடங்கப் படவுள்ளதால், அரசு தரப்பில் விற்பனை நிறுத்தப்பட்டதை அறியாமல் திருச்சியில் நேற்று மருந்து வாங்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடைபெற்று வந்தது.

தினமும் 100 முதல் 200 பேர் வரை மருந்து வாங்க காத்திருக்கும் நிலையில், 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க அதிகளவில் கூட்டம் கூடியதால், மே 18-ம் தேதி(இன்று) முதல் மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடைபெறும் என்று நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், ரெம்டெசிவிர் வாங்குவதற்காக திருச்சி அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் 100-க்கும் அதிகமானோர் நேற்று காத்திருந் தனர். இதில் பலர் நேற்று முன்தினம் இரவே அங்கு வந்துவிட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை அங்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மருந்து வாங்க காத்திருந்த மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர். அதில், 2 பெண்கள் தங்களுக்கு கட்டாயம் மருந்து வேண்டும் என்று தரை யில் விழுந்து கதறினர். அவர்களை சமாதானம் செய்ய வந்த பெண் காவலர்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு அழுதனர். பின்னர், மருந்து வாங்க காத்திருந்த அனைவரையும் போலீஸார் அங்கி ருந்து கலைந்து போகச் செய்தனர்.

இதுகுறித்து மருந்து வாங்க வந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘மருந்து விற்பனை இல்லை என கல்லூரி நுழைவுவாயில் முன் அறிவிப்புப் பலகை வைத்திருக்கலாம். வரிசையில் காத்திருக்கும்போது தெரிவித்திருந்தால் அப் போதே வீடு திரும்பியிருப்போம். வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT