முகூர்த்த நாளான நேற்று பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில் வாயிலில் எளிய முறையில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண். 
Regional01

பூட்டிய கோயில்களின் வாசலில் வைத்து - ஏராளமான திருமணம் :

செய்திப்பிரிவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமலில்இருக்கும் நிலையில், முகூர்த்தநாளான நேற்று திருநெல்வேலியில் பூட்டிய கோயில்களின் வாயிலில் வைத்து எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன.

கரோனா முழு ஊரடங்கு விதிகளின்படி கோயில்களில் வழிபாடுகளுக்கும், சுவாமி தரிசனத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. கோயிலுக்குள்அர்ச்சகர்கள் மட்டும் வழக்கமான பூஜைகளை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இக்காரணத்தால், நிச்ச யிக்கப்பட்டுள்ள திருமணங்களை கோயில்களில் நடத்த முடியாத நிலை இருக்கிறது. வைகாசி மாதத்தின் முதல் முகூர்த்த நாளான நேற்று, ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் கோயில்களின் வாயிலில் வைத்து எளிமையாக நடைபெற்றன. மொத்தமே 20 பேருக்குள் வந்த திருமண வீட்டார், அர்ச்சகர் இல்லாமல் வீட்டின் பெரியவர்கள் மாங்கல்யத்தை மணமகனிடம் எடுத்துக்கொடுத்து, மணமகளுக்கு கட்ட வைத்தனர். இவ்வாறு பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில் வாயிலில் 10-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. குறுக்குத்துறை முருகன் கோயில், திருநெல்வேலி சந்திப்பு சாலை குமாரசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் இதுபோல், வாயிலில் வைத்து திருமணங்கள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT