Regional02

ஊரடங்கு நாளிலும் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் தொடக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் இல்லாத நிலை இருந்தது. தற்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் சென்றுவிட்டது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகளவில்மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், மாவட்டத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தகவலறிந்து முழு ஊரடங்கையும் பொருட்படுத்தாமல், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைக்கு வந்து, காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

SCROLL FOR NEXT