குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ பி.தங்கமணி பேசினார். 
Regional01

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக - முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் ஆலோசனை :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், எமஎல்ஏவுமான பி.தங்கமணி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஸ்டாலின்பாபு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஆக்சிஜன் இருப்பு குறித்தும் தலைமை மருத்துவரிடம் முன்னாள் அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், பணியாட்கள் பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் எம்எல்ஏ தங்கமணி உறுதியளித்தார். நகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT