Regional02

கரோனா ஊரடங்கு விதிமீறல் - ராமநாதபுரத்தில் 1,555 வழக்குகள் பதிவு :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளை மீறி செயல் பட்டவர்கள் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாமல் சென்ற 599 பேர் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்த 64 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவையில் லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்த 1,555 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரவை மீறி செயல்பட்ட 9 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 5 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT