Regional01

லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கரூர் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந் தனர்.

கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன் (23). செல்போன் கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (28). இவர்கள் இரு வரும் மோட்டார்சைக்கிளில் நேற்று மாயனூர் சென்றுவிட்டு கரூர் திரும்பிக்கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சவுந்திர ராஜன் ஓட்டிவந்தார்.

உப்பிடமங்கலம் பிரிவு மேம்பால இறக்கத்தில் வரும் போது, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சவுந்திரராஜன், கோபால் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

SCROLL FOR NEXT