ஈரோடு பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட பழக்கடைகளில் பழங்களை வாங்கிய மக்கள். 
Regional01

வஉசி பூங்கா பகுதியிலிருந்து - ஈரோடு பேருந்து நிலையத்துக்கு பழக்கடைகள் இடமாற்றம் :

செய்திப்பிரிவு

ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த பழக் கடைகள் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட், ஈரோடு வஉசி பூங்கா பகுதிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறிகடைகள், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வரு கின்றன.

தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் மக்கள்கூட்டம் கூடுவதை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாக பெரியமார்க்கெட்டில் காலை7 மணி வரை மட்டுமே காய்கறிவியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் நேற்று முதல் வஉசி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

நேற்று காலை முதல் பழக்கடைகள் செயல்படத் தொடங்கின. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக பழக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT