சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் குடிசை வாழ் மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், முகக் கவசங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார். 
Regional01

சேலம் சூரமங்கலம் பகுதியில் - 24,584 பேருக்கு வைட்டமின் மாத்திரை வழங்கல் :

செய்திப்பிரிவு

சேலம் சூரமங்கலம் பகுதியில் குடிசைகளில் வாழும் 6,139 குடும்பங்களைச் சேர்ந்த 24,584 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகளை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில்கரோனா தடுப்பு நடவடிக்கையாக, குடிசைகளில் வசிக்கும் மக்களுக்குநோய் எதிர்ப்பு சக்தியை உரு வாக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் குடிசை வாழ் மக்கள் வசிக்கும் 25 பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 6,139 குடும்பங்களைச் சார்ந்த 24,584 பேருக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், முகக் கவசங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள், ஆர்சானிக் ஆல்பா மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.

முன்னதாக, சுப்ரமணிய நகர், சன்னதி தெருவில் தடை செய்யப் பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆணையர் ஆய்வு செய்தார்.

அப்போது, அப்பகுதி மக்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தேவைகேற்ப மாநகராட்சி பணியாளர் மூலம் வழங்கப்பட்டு வருவதை ஆணையர் உறுதி செய்தார்.

இப்பணிகளின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் ராம்மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT