கரோனா தொற்றால் பதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அரிசிபாளையம் முக்தியால் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (65). இவர் சேலம் மாநகராட்சி 27-வது வார்டு திமுக முன்னாள் செயலாளர். இவரது மகன் முருகேசன். காவல் உதவியாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர். தருமபுரி யில் வசித்து வந்தார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி சுப்பிரமணியனுக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மகன் இறந்த சோகத்தில் இருந்த சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.