சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (31). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி பவித்ரா (28), மகள் நந்திதா (5). கடந்த 9-ம் தேதி கோபிநாத் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோ தனை செய்து கொண்டார். இதில், அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் கோபிநாத்தின் வீடு திறக்காமல் இருந்தது. தகவல் அறிந்து நேற்று மதியம் அங்கு சென்ற கோபிநாத்தின் தாய், வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்தார். அப்போது, நந்திதா இறந்து கிடந்தார். மேலும், கோபிநாத் மற்றும் பவித்ரா ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கினர். அன்னதானப்பட்டி போலீஸார், 3 பேரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், கோபிநாத்துக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கரோனா அறிகுறி என்ற அச்சத்தில். குழந்தையை கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.