Regional01

சங்கரன்கோவிலில் காவலாளி கொலை :

செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (40). இவர், சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கும், பாலமுருகேசன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே இடப் பிரச்சினை இருந்துள்ளது.

நேற்று முன்தினம் அச்சம் பட்டிக்கு சென்ற கணேசனை, ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக, பாலமுருகேசனை, சங்கரன் கோவில் தாலுகா போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மாதவன் (55), முத்துசாமி (57), தங்கராஜ் (65) ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT