கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்ற வரும் 17-ம் தேதி நேர்காணல் நடைபெறு கிறது என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவைஅதிகரித்துள்ளது. அதனை ஈடுகட்டும் விதமாக அரசு வழி காட்டுதலின் படி, தற்காலிகமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள் 12 பேரும், செவிலியர்கள் 20 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
எனவே, 35 வயதிற்கு மிகாமல்உள்ள எம்பிபிஎஸ் அல்லது பட்டயமேற்படிப்பு முடித்த மருத்துவர் கள், தகுதி வாய்ந்த செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற விரும்புவோர் கிருஷ்ணகிரி இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் கல்வி சான்றுகளுடன் வருகிற 17-ம் தேதி நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 99654 - 08870 என்கிற எண்ணில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.